search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தருமபுரி பஸ் நிலையம்"

    • விளக்குகள் பழுதாகி உள்ளதால் பஸ் நிலையம் இருட்டில் மூழ்கியுள்ளது.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி புறநகர் பஸ்நிலையம் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய பஸ்நிலையமாக உள்ளது.

    இந்த பஸ் நிலையத்திற்கு கன்னியாகுமரி, நாகர் கோவில், திருநெல்வேலி, மதுரை, கரூர், நாமக்கல், திருச்சி, ஈரோடு, கோயம்புத்தூர், சேலம், உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து வடக்கில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வாணியம்பாடி, வேலூர், சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களை இணைக்கும் முக்கிய பஸ் நிலையமாக இருந்து வருகிறது.

    இரவு முழுவதும் வெளியூர் பஸ்கள் வந்து செல்வதால் எப்போதும் பஸ் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் இருந்து வரும். இதனால் பஸ்நிலையத்தில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பஸ் நிலையம் முழுவதும் ஆங்காங்கே சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தி குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க கண்காணித்து வருகின்றனர். அதனால் பஸ் நிலையத்தில் பொது மக்கள் பயமின்றி இருக்கவும் பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லவும் பஸ் நிலையத்தின் நடுவே உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த கோபுரத்தின் உச்சியில் 4 திசையிலும் வெளிச்சம் தெரியும் வகை யில் மெர்குரி மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.தற்போது இந்த மின் விளக்குகளில் 3 விளக்குகள் மட்டுமே எரிகிறது. மற்ற விளக்குகள் பழுதாகி உள்ளதால் பாதி பஸ் நிலையம் இருட்டில் மூழ்கியுள்ளது.

    நேற்று தீபாவளி பண்டிகை முடிந்து பயணி களின் கூட்டம் குவிந்ததால் பஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. இந்த நிலையில் சில இளைஞர்கள் குடி போதையில் திரிவதால் பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர். மேலும் பாதி பஸ் நிலையம் இருளில் மூழ்குவதால் அங்கு பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கேமராக்கள் சரிவர காட்சி படங்கள் தெரியாததால் குற்ற சம்பவத்தை தடுக்க போலீசார் திணறி வருகின்றனர்.

    எனவே பஸ் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பை கருதி உயர்மின் கோபுரத்தை உடனடியாக சீர் செய்ய மாவட்ட நிர்வாகமும் நகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் பஸ் டிரைவர், கண்டக்டர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×